இன்னும் 3 மாதத்தில் ஸ்டாலின் இறந்துவிடுவார் : அழகிரி!!

294

Alagiriதிமுக தலைவர் கருணாநிதிக்கும், அழகிரிக்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்தையை கருணாநிதி கூறியுள்ளார்.

கட்சி விரோத நடவடிக்கைகளுக்காக திமுகவில் இருந்து மு.க. அழகிரி தற்காலிகமாக நீக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து திமுக தலைமையை தொடர்ந்து விமர்சித்து பேசி வருகிறார் மு.க. அழகிரி.

இந்நிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் கருணாநிதி கூறுகையில், தி.மு.க செயற்குழு, பொதுக்குழு முடிவுக்கு எதிராக அழகிரி செயல்பட்டார். செயலாளர் பொறுப்பை மறந்து அவர் செயல்பட்டதால் அழகிரி மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஸ்டாலின் மீது ஏதோ இனம் தெரியாத வெறுப்பு இருந்து வந்தது. இதற்கெல்லாம் உச்சக்கட்டமாக கடந்த 24 ம் திகதி விடியற்காலை எனது வீட்டுக்குள்ளே அவர் நுழைந்து படுக்கையில் இருந்த என்னிடம் ஸ்டாலினை பற்றி புகார் கூறி விரும்பத்தகாத, வெறுக்கத்தக்க வார்த்தைகளையெல்லாம் மள, மளவென பேசி என்னை கொதிப்படைய வைத்தார்.

மேலும் ஸ்டாலின் இன்னும் 3 மாதத்தில் செத்து விடுவார் அவருக்கு ஏன் பதவி வழங்க வேண்டும் என்று கேட்டார். இதனை எந்த தந்தையால்தான் ஏற்க முடியும். நான் தலைவர் என்ற முறையில் இதனை ஏற்று கொண்டேன். தென் மண்டல செயலர் என்பதை மறந்து பேட்டி அளித்தது , அரசியலில் தவறான வழிகாட்டியாக அமைந்து விடும் என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள்.

இந்த இயக்கம் அண்ணாதுரை காலத்தில் இருந்து இதுவரை எத்தனையோ சோதனைகளை எல்லாம் சந்தித்துவிட்டு, இன்னமும் வாழ்ந்து கொண்டிருக்கிற இயக்கமாகும்.

தமிழ் மக்கள், வளத்தோடும், வலிமையோடும் வாழ வேண்டும் என்பதற்காக என்னுடைய 14வது வயது முதல், இந்த 91வயது வரையில் பல தியாகங்களை செய்து, அடக்குமுறைகளை ஏற்று, பெரியாரும் அண்ணாதுரையும் உருவாக்கி தந்த இந்த இயக்கத்தை வளர்த்துக் கொண்டிருக்கின்றவன் என்ற முறையில், உண்மை நிலவரத்தை தமிழ் மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்பதற்காகவே பத்திரிகையாளர்கள் ஆகிய உங்கள் மூலமாக இந்த செய்திகளை எல்லாம் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

தொடர்ந்து நிரூபர்கள் கேட்ட கேள்விக்கு அவர் அளித்துள்ள பதில்

கேள்வி: அழகிரி மன்னிப்பு கேட்டால் கட்சியில் சேர்த்து கொள்வீர்களா?

பதில்: இதை அழகிரியிடம் கேளுங்கள்.

திமுக தலைவர் கருணாநிதிக்கும், அழகிரிக்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்தையை கருணாநிதி கூறியுள்ளார்.

கேள்வி: தே.மு,தி.க.,வுடன் கூட்டணி எந்த நிலையில் உள்ளது.

பதில்: அழைப்போடு நிற்கிறது. அதற்கு மேலும் தொடர வேண்டியது அவர்களே அன்றி நாங்கள் அல்ல.

கேள்வி: முறைகேடுகள் குறித்து கொட்டாம்பட்டி ராஜேந்திரன் கொடுத்த புகாரில் நீங்கள் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறதே?

பதில்: கொட்டாம்பட்டியையும் பார்க்கவில்லை. குண்டலாம்பட்டியையும் பார்க்கவில்லை.

கேள்வி: காங்கிரஸ் கூட்டணிக்காக உங்களை தேடி வருகிறதா?

பதில்: காங்கிரஸ் என்னை தேடி வருவதாக ஜம்பம் அடித்துக் கொள்ள விரும்பவில்லை. ஒருவருக்கொருவர், சுயமரியாதையை விட்டு கொடுக்காமல் கூட்டு அமைத்திட வேண்டும்.

கேள்வி: ராஜ்யசபாவில் காங்கிரசுடன் கூட்டு உண்டா?

பதில்: இல்லை

கருணாநிதி பேட்டி குறித்து இன்று அழகிரி நிரூபர்களிடம் பேசுகையில், நான் அவதூறாக பேசினேன் என்று இதனை அன்றே சொல்ல வேண்டியதுதானே இத்தனை நாள் கழித்து சொல்வது ஏன் ? 5 நாட்களுக்கு முன்னதாக சொன்ன காரணம் வேறு, இப்போது சொன்ன காரணம் வேறு. இதனை பத்திரிகையாளர் தான் அவரிடம் கேட்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

ஸ்டாலின் குறித்து பேசியதால் கட்சியில் இருந்து நீக்கியதாக கூறுகிறார்கள். ஏன் எனது தம்பியை பற்றி பேசினால் கட்சியில் இருந்து நீக்கி விடுவதா, தம்பியை பற்றி பேசினால் என்ன, எனது தங்கை குறித்து பேசுவேன், தாயார் குறித்து பேசுவேன், பேசுவது கூடாதா, கட்சியை மிரட்டியதாக கூறப்படுகிறதே, இது பொய் என்று கூறியுள்ளார்.