தமக்கு பயிற்சி தேவை : உகண்டா இலங்கையிடம் கோரிக்கை!!

617

Ugandaஇலங்கையின் இராணுவ பயிற்சியை தமது நாடு எதிர்ப்பார்ப்பதாக உகண்டாவின் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள அவர் நேற்று இலங்கையின் இராணுவ தளபதி லெப்டினனட் ஜெனரல் தயா ரட்நாயக்கவை சந்தித்து கலந்துரையாடினார்.

இதன்போதே உகண்டாவின் பாதுகாப்பு அமைச்சர் தமது கோரிக்கையை விடுத்தார். உகண்டாவின் பாதுகாப்பு அமைச்சர் ஒடொன்கோ ஜெலீ உட்பட்ட குழுவினர் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளனர்.

இரண்டு நாடுகளுக்கும் இடையில் பாதுகாப்பு தொடர்பான கருத்தரங்குகள், எதிரிகள் மீதான தாக்குதல்கள் மற்றும் சினைப்பர் தாக்குதல் போன்ற விடயங்களிலேயே தமது நாடு இலங்கையிடம் இருந்து பயிற்சிகளை எதிர்ப்பார்ப்பதாக உகண்டாவின் பாதுகாப்பு அமைச்சர் நேற்றைய சந்திப்பின் போது தெரிவித்துள்ளார்.