கொரோனா வைரஸ் தொற்று : தமிழகத்தில் முதலாம் நபர் பலி!!

592

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்த மதுரையை சேர்ந்த நபர் உயிரிழந்துள்ளதாக தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த நபர் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட 54 வயது நபரே சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது.

உயிரிழந்த நபருக்கு சர்க்கரை நோய் மற்றும் உயர் இரத்த அழுத்த பிரச்சினை அதிகளவில் இருந்ததாக அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியதாகவும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், உயிரிழந்தவருக்கு ஏற்கனவே நுரையீரல் தொடர்பாக பிரச்சினை இருந்ததாகவும் அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளதாக அந்த செய்தியில் தொடர்ந்தும் கூறப்பட்டுள்ளது.