பிரான்ஸில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகி யாழ். இளைஞர் பரிதாபமாக உயிரிழப்பு!!

751

இலங்கையை சேர்ந்த நபரொருவர் பிரான்ஸ் நாட்டில் கொரோனா நோய் தாக்கத்திற்கு இலக்காகிய நிலையில் உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் நேற்றிரவு உயிரிழந்துள்ள நிலையில் அவரின் உடலை குடும்பத்தாரிம் ஒப்படைக்க பொலிஸார் மறுத்துள்ளதாக தெரியவருகிறது.

யாழ். தாவடியை பிறப்பிடமாக கொண்ட 32 வயதுடைய குணரட்ணம் கீர்த்திபன் (கீர்த்தி) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இவர் கொக்குவில் இந்து கல்லூரியின் பழைய மாணவர் என்பதுடன் திருமணம் முடித்த இளம் குடும்பஸ்தர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

புலம் பெயர்ந்த நாடுகளில் உள்ள தமிழர்கள் இந்த கொரோனாவின் பிடியில் சிக்கித் தவிக்கும் இந்த நேரத்தில் பிரான்சிலும் தமிழர்கள் பலர் இந்த வைரஸ் தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ளனர் என தெரியவருகிறது.