1980களில் முன்னணி நடிகையாக கலக்கியவர் ரஞ்சனி. முதல் மரியாதை படத்தில் அறிமுகமானார். கடலோர கவிதைகள், மண்ணுக்குள் வைரம் உள்பட ஏராளமான தமிழ் படங்களில் நடித்தார். மலையாளத்திலும் 20க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார்.
ரஞ்சனி கடைசியாக நடித்த சார் ஐ லவ்யு படம் 1991ல் ரிலீசானது. அதன் பிறகு திருமணம் செய்து கொண்டு சினிமாவை விட்டு விலகினார். தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் நடிக்க வந்துள்ளார். இதுபற்றிய அவர் கூறியதாவது..
என் உடம்பு முன்பை விட பல மடங்கு எடை போட்டுள்ளது. எனவே நடிக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு வந்தது இல்லை. ஆனால் மலையாளத்தில் கூதரா என்ற படத்தின் கதையை சொல்லி நடிக்க அழைத்தனர். கதை பிடித்து இருந்ததால் சம்மதித்தேன். 23 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் நடிக்க வந்துள்ளேன்.இந்த படத்தில் ரசிகர்கள் என்னை ஏற்றுக் கொண்டால் தொடர்ந்து சினிமாவில் நடிப்பேன் என்று அவர் கூறினார்.





