அதிரடியில் கலக்கப்போகும் நயன்தாரா!!

470

Nayantharaசினிமாவில் விஜயசாந்தி ஆக்ஷன் நடிகையாக கருதப்பட்டார். இவர் நடித்த வைஜெயந்தி ஐ.பி.எஸ் படத்தில் அதிரடி சண்டை போட்டார். இப்படம் வெற்றிகரமாக ஓடியது. இதேபடத்தை பவானி என்ற பெயரில் ரீமேக் செய்து சினேகா நடித்தார். இவரும் தாவி குதித்து சண்டைபோட்டு ஆக்ஷன் நடிகை என்ற அடையாளத்தை பெற்றார்.

இவர்களுக்கு பிறகு அனுஷ்கா ஆக்ஷன் வேடங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் ரிலீசான இரண்டாம் உலகம் படத்தில் வாளை அபாரமாக சுழற்றி சண்டை போட்டார். ருத்ரமாதேவி படத்திலும் மகாராணி வேடத்தில் சண்டை காட்சிகளில் நடித்து வருகிறார். வாள் சண்டை, குதிரையேற்றம் போன்றவற்றில் பயிற்சிகள் எடுத்து இதில் நடிக்கிறார்.

அனுஷ்காவை தொடர்ந்து நயன்தாராவும் ஆக்ஷன் நடிகை அவதாரம் எடுக்கிறார். கோபிசந்த் ஜோடியாக நடிக்கும் தெலுங்கு படம் ஒன்றில் வில்லன்களுடன் அதிரடியாக சண்டை போட்டு நடிக்கிறாராம்.

ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் விசேஷ செட் போட்டு இந்த காட்சியை படமாக்குகின்றனர். ஸ்டன்ட் மாஸ்டர் கனல் கண்ணன் இந்த சண்டை காட்சியை படமாக்கி வருகிறாராம். இப்படத்துக்கு பிறகு நிறைய ஆக்ஷன் படங்கள் நயன்தாராவுக்கு குவியும் என்கின்றனர்.