இலங்கையில் கொரோனா தொற்றாளிகளின் எண்ணிக்கை 115ஆக உயர்வு!!

644

இலங்கைக்குள் கொரோனா வைரஸ் தொற்றாளிகளின் எண்ணிக்கை 115ஆக உயர்ந்துள்ளது. நேற்று மாலை வரை இந்த தொகை 113ஆக இருந்தது.

இந்தநிலையில் இன்று காலை மேலும் இரண்டு தொற்றாளிகள் கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை கண்டி அக்குரனையில் உள்ள கிராமம் மற்றும் புத்தளம் கடயங்குளம் ஆகிய கிராமங்கள் கொரோனா வைரஸ் தொற்றாளிகள் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் முடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது