கொரோனாவின் அகோரம் : ஆபத்தான வாரத்திற்குள் நகரும் இலங்கை : சுகாதாரப் பிரிவு எச்சரிக்கை!!

369

இலங்கையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை நாளாந்தம் அதிகரித்து வரும் நிலையில், அடுத்த வாரம் இன்னும் மோசமான நிலையை அடையும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் ஏப்ரல் மாதம் 7ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் இலங்கையில் பதிவாகும் நோயாளிகளின் எண்ணிக்கையில் பாரிய அதிகரிப்பு ஏற்படும் என அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

வைரஸ் பரவலின் மூன்றாம் கட்டமாக தற்போது குழுக்களாக பரவி வருவதாகவும் வைரஸின் நான்காவது கட்டம் பரவினால் அது மிக ஆபத்தான சூழ்நிலையை ஏற்படுத்தும் என சங்கத்தின் ஊடக பேச்சாளர் வைத்தியர் சமந்த ஆனந்த தெரிவித்துள்ளார்.

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நேற்று முதலாவது மரணம் சம்பவித்துள்ளது. இந்நிலையில் நூற்றுக்கும் அதிகமானோர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நேற்று புதிய கொரோனா நோயாளிகள் 7 பேரும் இன்று காலை இருவரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதற்கமைய இதுவரையில் அடையாளம் காணப்பட்ட எண்ணிக்கை 113 ஆகும்.

அத்துடன், இரண்டு வைத்தியர்களும் கொரோனா நோய் தொற்றுக்குள்ளாகியுள்ளதுடன், 10 வைத்தியர்கள் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்பட்டு வருவதாக அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.