அனுமதியின்றி பயணிப்போர் பிடியாணையின்றி கைது செய்யப்படுவார்கள்!!

528

அனுமதிக்கப்பட்ட சேவை அடையாள அட்டை அல்லது ஊரடங்குச் சட்ட அனுமதிப் பத்திரம் இன்றி வீதிகளில் பயணிக்கும் அனைவரும் பிடியாணையின்றி கைது செய்யப்படுவார்கள் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் அவர்கள் பயணம் செய்யும் வாகனங்கள் கைப்பற்றப்படும் எனவும் கொரோனா வைரஸ் ஆபத்து தனியும் வரை அந்த வாகனங்களை பொலிஸ் நிலையங்களின் பொறுப்பில் வைத்திருக்குமாறு அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

கைதுசெய்யப்படுபவர்கள் குற்றவாளியாக கருதப்படுவார்களானால் அவர்களுக்கு அபராதம் அல்லது சிறைத்தண்டனை வழங்க சட்டத்தில் இடமுண்டு என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

தேவையேற்படின் கைதுசெய்யப்படுபவர்கள் பொதுசுகாதார அதிகாரி அல்லது சட்டவைத்திய அதிகாரியின் முன் பிரசன்னப்படுத்தப்பட்டு அவர்களின் அறிக்கை பெறப்படும் என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.