
கொழும்பு நகரின் பாதுகாப்புக்காக நகருக்குள் பிரவேசிக்கும் அனைத்து வழிகளும் உள்ளடங்கும் வகையில் விசேட அதிரடிப் படையினர் 16 வீதி சோதனை சாவடிகளை ஏற்படுத்தியுள்ளனர்.
இந்த விடயத்தை சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தனிமைப்படுத்தப்பட்டுள்ள நகரங்கள் மற்றும் கிராமங்களை சேர்ந்த நபர்கள் கொழும்பு நகருக்கு வருவதை தடுக்கும் நோக்கில் இந்த வீதி சோதனை சாவடிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
மேலும் கொழும்பு நகரின் நடவடிக்கைகளுக்கு தடையேற்படுத்தும் வகையில் நகருக்குள் வரும் நபர்களை சோதனையிடுதல், ஊரடங்குச் சட்டத்தை மீறுவோரை கைது செய்தல், வாகன சோதனைகள் உள்ளிட்ட நடவடிக்கைகள் இந்த வீதி சோதனை சாவடிகள் மூலம் மேற்கொள்ளப்படும் எனவும் அஜித் ரோஹன குறிப்பிட்டுள்ளார்.




