புதுவையில் உள்ள மத்திய அமைச்சர் நாராயணசாமி வீட்டில் சக்தி வாய்ந்த வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டு செயலிழக்க செய்யப்பட்டது.
மத்திய அமைச்சர் நாராயணசாமி புதுச்சேரி எல்லையம்மன் கோவில் வீதியில் உள்ளது. தற்போது மத்திய நாராயணசாமி டெல்லியில் உள்ளார். இந்த நிலையில் மத்திய அமைச்சர் நாராயணசாமி வீட்டின் எதிரே அவருக்கு சொந்தமான கார் நிறுத்தப்பட்டு இருந்தது.
இன்று காலை கார் டிரைவர் காரை கழுவி சுத்தம் செய்ய சென்றார். அப்போது காரின் பின்னால் இரும்பு பைப்பால் ஆன மர்ம பொருள் கிடப்பதை கண்டு திடுக்கிட்டார். இதுபற்றி கார் டிரைவர் வீட்டில் உள்ளவர்களிடம் தெரிவித்தார்.
அவர்கள் இதுகுறித்து உடனடியாக ஒதியஞ்சாலை பொலிசாருக்கு தகவல் கொடுத்தனர். உடனடையாக பொலிசாரும் வெடிகுண்டு நிபுணர்களும் வந்தனர்.
அவர்கள் அந்த மர்ம பொருளை சோதனையிட்டனர். 1 1/2 அடி நீளமும், 3 அங்குலம் அகலமும் கொண்ட இரும்பு பைப்பில் சக்தி வாய்ந்த வெடிகுண்டு இருப்பதை கண்டுபிடித்தனர். பின்னர் அது பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு சென்று செயழிலக்க செய்யபட்டது.
இந்த சக்தி வாய்ந்த வெடிகுண்டு வெடித்திருந்தால் விளைவு பெரிதாக இருந்திருக்கும் என்று வெடிகுண்டு நிபுணர்கள் தெரிவித்தனர். இது குறித்து மத்திய அமைச்சர் நாராயணசாமி கூறும்போது..
காங்கிரஸ் தலைவர்களும், தொண்டர்களும் தீவிரவாதத்தை ஏற்கனவே சந்தித்தவர்கள் தான். இதனால் இதுபோன்ற வெடிகுண்டு மிரட்டலுக்கு எல்லாம் நான் பயப்பட மாட்டேன். பொலிசார் உண்மை குற்றவாளிகளை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
புதுவையில் ரங்கசாமி ஆட்சியில் பொதுமக்களுக்கும், அரசியல்வாதிகளுக்கும் பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது என்று ஏற்கனவே பலமுறை கூறியிருந்தோம். அது தற்போது நிரூபணமாகி உள்ளது என்று தெரிவித்தார்.




