கொரோனா தொற்று


கொரோனா வைரஸ் தொற்றியதாக நேற்று உறுதி செய்யப்பட்ட குருநாகல் பெண்ணினால் வங்கி கிளை ஒன்று மூடப்பட்டுள்ளது.

48 வயதுடைய குறித்த பெண், இதற்கு முன்னர் கொரோனா தொற்றியதாக உறுதி செய்யப்பட்ட நாத்தன்டிய பிரதேசத்தை சேர்ந்த பெண்ணுடன் தொடர்பில் இருந்துள்ளார் என தெரியவந்துள்ளது.

இந்நிலையில் குறித்த பெண் கட்டுபத்த இலங்கை வங்கியில் கொடுக்கல் வாங்கல் மேற்கொண்டமையினால் எதிர்வரும் 14 நாட்களுக்கு வங்கி கிளை மூடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

அத்துடன் குறித்த பெண்ணின் வீடு அமைந்து மடலெஸ்ஸ சந்தி பகுதிக்கு நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 30ஆம் திகதி இந்த பெண் தனது நோய் தொடர்பில் சிகிச்சை பெறுவதற்காக தனியார் வைத்தியர் ஒருவரை சந்தித்துள்ளார் என தெரியவந்துள்ளது.

இந்நிலையில் குறித்த பெண்ணின் கணவர் மற்றும் இரண்டு பிள்ளைகள் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.




