வவுனியா மாவட்டத்தில் மரக்கறிகளை விற்பனை செய்ய முடியாத விவசாயிகளுக்கு விற்பனை தொடர்பை ஏற்படுத்திக் கொடுத்தல் மற்றும் வீட்டில் உள்ள அனைவருக்கும் வீட்டுத் தோட்டம் செய்வதற்கான விதைகள் மற்றும் மரக்கறி கன்றுகளை மானிய விலை அடிப்படையில் வழங்கும் செயற்றிட்டங்களுக்கான அறிவிப்பு – 02.04.2020
வவுனியாவில் விவசாயிகள் தங்களது பொருட்களை விற்பனை செய்ய முடியாத நிலை காணப்படின் அவர்கள் எமது துரித எண் 0242225511 இனை அழைத்து (காலை 9 தொடக்கம் 4 மணிவரை) விபரங்களை வழங்கவும். மொத்த கொள்வனவாளர்களுடன் விற்பதற்கான இணைப்பை ஏற்படுத்தி தரப்படும்.
தற்போதைய நாட்டின் சூழ் நிலையினால் எல்லோரும் வீட்டில் உள்ளனர். எனவே வீட்டில் இருக்கும் இக் காலப்குதியில் வீட்டுத் தோட்டத்தினை அபிவிருத்தி செய்வும் முகமாகவும் எதிர்காலத்தில் ஏற்பட இருக்கும் உணவுத் தட்டுப்பாட்டினை எதிர்கொள்ளும் முகமாவும் விவசாய அமைச்சினால் வீட்டுத் தோட்டத்தினை அபிவிருத்தி செய்யும் நிகழ்ச்சித்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கமநல அபிவிருத்தி திணைக்களம் மற்றும் விவசாய திணைக்களம் இணைந்து மேற்கொள்ளும் இச் செயற்றிட்டத்தில் வவுனியா மாவட்டத்தில் சுகாதார திணைக்களமும் இணைந்துள்ளனர்.
வீட்டுத் தோட்டத்திற்கான விதைகள் மற்றும் மரக்கறி கன்றுகளை மானிய அடிப்படையில் வழங்கும் செயற்பாடு எதிர்வரும் திங்கள்கிழமை 06.04.2020 தொடக்கம் ஆரம்பிக்கப்பட உள்ளது. வவுனியா நகர சபைக்குட்பட்ட கிராம சேவையாளர் பிரிவுகள் மற்றும் பிரதேச சபைக்குட்பட்ட மக்கள் அதிகம் வாழும் கிராமங்கள் முதற்கட்டத்திற்குள் உள்வாங்கப்பட்டுள்ளது. மேலதிக விபரங்களுக்கு 0242221053 எனும் எண்ணை தொடர்பு கொள்ளவும்.
மாவட்ட உதவி ஆணையாளர், கமநல அபிவிருத்தி திணைக்களம், வவுனியா