கொரோனா வைரஸ் அச்சம் : மருந்தகங்கள் திறக்கப்படும் என்று அறிவித்தும் வெளியே வராத மக்கள்!!

627

கொரோனா வைரஸ்

நாட்டில் தொடர்ச்சியான கொரோனா வைரஸ் நோயாளர்கள் அடையாளம் கண்டுவருகின்ற நிலையில் அச்சம் மக்களிடையே அதிகரித்துள்ளது. இதன் காரணமாக சமூக இடைவெளிக்கு மக்கள் அதீத முக்கியத்துவம் கொடுத்து வருவதை அவதானிக்க முடிகிறது.

அந்த வகையில் கண்டி நகரில் நேற்று அத்தியாவசிய தேவைக்காக பொலிஸாரின் அனுமதிப் பெற்று நகரிற்குள் வந்த சிலர் சமூக இடைவெளியை பேணியுள்ளனர். இதேவேளை கண்டி நகரம் நேற்றும் வெறிச்சோடியது.

ஊரடங்குச் சட்டம் கண்டி மாவட்டத்திற்கும் அடுத்த அறிவிப்புவரை நீடிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பாக எப்போதும் காணப்படும் கண்டி நகரம், வர்த்தக நிலையங்கள், ஸ்ரீ தலதா மாளிகை, அஸ்கிரிய மற்றும் மல்வத்துப்பீட நுழைவாயில்கள் வெறிச்சோடிக் காணப்படுகின்றன.