தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தி வீடடுக்கு அனுப்பி வைக்கப்பட்ட நபருக்கு கொரோனா!!

681

கொரோனா

தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்க வைக்கப்பட்டு கண்காணிப்பை நிறைவு செய்து வீடு திரும்பிய ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.

தென் கொரியாவில் தொழில் புரிந்து வந்த நிலையில் நாடு திரும்பியவர்கள் வெலிகந்தை கந்தகாடு இராணுவ முகாமில் உள்ள தனிமைப்படுத்தல் நிலையத்தில் 14 நாட்கள் தங்க வைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்ட பின்னர், கடந்த 24 ஆம் திகதி வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இவர்களுடன் சென்ற களுத்துறை பிரதேசத்தை சேர்ந்த ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளதாக தெரியவந்தை அடுத்து, அவருடன் பேருந்தில் பயணித்த காலி மாவட்டத்தை சேர்ந்த 6 பேர் மருத்துவப் பரிசோதனைக்காக இன்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக தென் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இந்த ஆறு பேரில் ஒருவர் மாத்தறை கொட்டவில வைத்தியசாலையிலும் ஏனையோர் காலி கராப்பிட்டிய வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த ஆறு பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளதா என்பதை அறிய பீ.சீ.ஆர்.பரிசோதனைக்கு உட்படுத்துவதற்காக இவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதார சேவைகள் பணிப்பாளரின் அலுவலகம் கூறியுள்ளார்.