வீட்டுத்தோட்டச் சவாலில் பங்கெடுத்த பிரதமர் மகிந்த!!

653

பிரதமர் மகிந்த

வீட்டுத்தோட்ட சவாலில் பங்கெடுக்க தனக்கும், தனது மனைவி ஷிரந்திக்கும் சந்தர்ப்பம் கிடைத்தமை குறித்து மிகவும் மகிழ்ச்சியடைவதாக பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
தனது டுவிட்டர் பக்கத்தில் இட்டுள்ள பதிவில் அவர் இதனை கூறியுள்ளார்.

தங்காலை கால்டன் இல்லத்தில் பிரதமரும், அவரது பாரியாரும் செடி ஒன்றை நாட்டி அதற்கு தண்ணீர் பாய்ச்சும் படங்களும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. டுவிட்டர் பதிவில் தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள பிரதமர், கொரோனா வைரஸ் தொற்று உலகத்தை அழித்துள்ளது.

அத்துடன் அது எமது எதிர்கால சந்ததியினர் மிகவும் நிலையான வாழ்க்கை முறைகளை பின்பற்ற வேண்டியதன் அவசியத்தை கற்பித்துள்ளது. அனைவரும் தங்களது பங்கை செய்ய வேண்டும் என நான் ஊக்குவிக்கின்றேன் எனக் கூறியுள்ளார்.