பிரித்தானிய அரசின் உத்தரவை மீறிவரும் மக்கள் : ஒருநாளில் 708 உயிரிழப்புக்கள்!!

506

ஒருநாளில் 708 உயிரிழப்புக்கள்..

2019ம் ஆண்டு இறுதியில் சீனாவை உலுக்கிய கொரோனா வைரஸ் தொற்றுநோய் கொஞ்சம் கொஞ்சமாக பின்னர் வேகமாக உலக நாடுகளிலேயும் பரவி பல உயிர்களை கொன்றொழித்துவரும் நிலையில் பிரித்தானியாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 708 பேர் உயிரிழந்துள்ளதாக இன்றைய கொரோனா வைரஸ் தொடர்பான புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த சில நாட்களாக பிரித்தானியாவில் உயிரிழப்புக்களும் தொற்றுநோயாளார்களின் எண்ணிக்கையும் மிகமிக வேகமாக அதிகரித்து வருவது கண்கூடு.

கொரோனா தாக்கத்தின் பிடியில் இருந்து விடுபடவேண்டும் என்பதற்காக சிற்சில நாடுகள் மிக கடுமையான முடக்கல்களை அமுல்ப்படுத்தியிருந்தாலும் பிரித்தானியா கடுமையாக முடக்காதுவிடினும் மக்களுக்காக சில அறிவுறுத்தல்களை வெளியிட்டிருந்தது.

ஆனாலும் அதை மக்கள் செவிமெடுக்காது கடந்த மாதம் அன்னையர் தினத்துக்காக வெளியிடங்களில் சமூக இடைவெளிகளை கடைப்பிடிக்காது ஒன்றாக பொது இடங்களில் கூடியிருந்ததை பிரித்தானிய ஊடகங்கள் வெளிக்காடி இருந்தமையை அடுத்து மீண்டும் அரசு மக்களை வீடுகளில் முடங்கியிருந்து மருத்துவ பணியாளர்களை உற்சாகப்படுத்தி கொரோனா வைரஸ் பிடியில் சிக்குண்ட நம் நாட்டையும் மக்களையும் காப்பாற்றுமாறும் கேட்டிருந்தது.

இந்நிலையில் பிரித்தானிய இளவரசர் மற்றும் பிரதமர் உட்பட இன்னும் சில உயரதிகாரிகளுக்கு கொரோனா தொற்று இருப்பதை மருத்துவர்கள் உறுதிப்படுத்திய பின்னரும் பிரித்தானியாவில் நாளாந்த உயிரிழப்புக்கள் அதிகரித்தவண்ணமே இருக்கின்றது.

இந்நிலையில் பிரித்தானியாவில் இன்றைய காலநிலை மிகவும் நன்றாக இருப்பதனால் பல இடங்களில் பொதுமக்கள் கூடி இருப்பதை மீண்டும் பிரித்தானிய ஊடகங்கள் வெளிவிட்டிருக்கின்றன.

இவ்வாறு தொடரும் நாட்களில் வெப்பநிலை அதிகரிக்கும் என்பதனால் பிரித்தானிய மக்கள் அரச அறிவுறுத்தல்கள் எதனையும் கருத்திற்கொள்ளாது, கொரோனாவுக்கு பயப்படாது தத்தம் வேலைகளில் ஈடுபடுவதோடு வார இறுதி நாட்களில் சூரிய வெளிச்சத்திற்காக பொது இடங்களில் கூடுவதைத் தவிர்க்கவே முடியாது.

இதனாலேயே கொரோனா தொற்று இன்னும் அதிகமாக ஏற்படும் என்பதை அரசு அடிக்கடி சுட்டிக்காட்டினாலும் மக்கள் அதைப் பொருட்படுத்துவதில்லை என்பதும் பொலிஸாரால் அதைக் கட்டுப்படுத்தமுடியாது என்பதையும் பிரித்தானிய ஊடகங்கள் படங்கள் மூலம் வெளிப்படுத்தியுள்ளது.