வவுனியாவில் ‘தங்கத் தாத்தா’ நவாலியூர் சோமசுந்தரப் புலவரின் நினைவு தினம்!!

756

Vavuniyaதங்கத் தாத்தா என அழைக்கப்படும் நவாலியூர் சோமசுந்தரப் புலவரின் நினைவு தினம் வவுனியாவில் நேற்று முன்தினம் (28) அனுஸ்டிக்கப்பட்டது.

1878ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தின் நாவாலியில் பிறந்து 1953ஆம் ஆண்டு மரணமடைந்த நவாலியூர் சோமசுந்தரப் புலவர், சிறுவர்களின் பாடல்கள் உட்பட தமிழர்களின் கலாசார விழுமிய்ஙகளை உள்ளடக்கி பாடல்களையும் கவிதைகளையும் எழுதியிருந்தார்.

சிறுவர்களை மையமாக கொண்டு அதிகளவான பாடல்களை எழுதியதுடன் முதன் முதல் தமிழில் சிறுவர்களுக்கான சிறுவர்களின் சல்லாப நாடகம் எனும் நாடகத்தை எழுதியமையினால் ‘தங்கத் தாத்தா’ என சிறுவர்களால் செல்லமாக அழைக்கப்பட்டார்.

சோமசுந்தரப்புலவரின் நினைவு தினம், வவுனியா பஸார் வீதியில் அமைந்துள்ள அவரது சிலைக்கருகில் அனுஸ்டித்திருந்தனர்.

வவுனியா வரியிறுப்பாளர் சங்கம் மற்றும் கலை இலக்கிய நண்பர்கள் வட்டம் இணைந்து ஏற்பாடு செய்திருந்த இந்நிகழ்வில் சோமசுந்தரப் புலவரின் வம்சத்தைச் சேர்ந்த திருமதி மணிவண்ணன் மங்களேஸ்வரி உட்பட கலாநிதி நா.தர்மராஜா, வரியிறுப்பாளர் சங்க தலைவர் செ. சந்திரகுமார், வவுனியா கலாசார உத்தியோகத்தர் இ. நித்தியானந்தன், முன்னாள் நகர உப தலைவர் எஸ். சந்திரமோகன், தேசமான்ய எஸ்.சிவஞானம், வவுனியா நகரசபை செயலாளர் எஸ்.சத்தியசீலன் உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.