பருத்தித்துறையில் கரையொதுங்கிய மூங்கில் வீடு : மக்கள் திரண்டு சென்று பார்வையிடுகின்றனர்!!(படங்கள்)

339

யாழ். வடமராட்சிப் பிரதேசத்தில் பருத்தித்துறை முனைப்பகுதியில் நேற்று முன்தினம் செவ்வாயக்கிழமை மூங்கில் வீடு ஒன்று கரையொதுங்கியுள்ளது.

இவ்வாறு கரையொதுங்கியுள்ள மூங்கில் வீட்டை மக்கள் திரள் திரளாக சென்று பார்வையிட்டுவருகிறார்கள் என தெரிவிக்கப்படுகிறது. மதியம் 12 மணியளவில் கரை ஒதுங்கிய இந்த மூங்கில் வீடு சுமார் 10 பேர் வரை வசிக்க்கக்கூடியதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

பொதுவாக இவ்வகை வீடுகள் கடல் தொழிலுக்காக கம்போடியா – தாய்லாந்து மற்றும் சீனாவில் தயார் செய்யப்படுகிறது. மேற்படி வீட்டை பார்வையிட்ட கடலோடி வயோதிபரான சின்னத்தம்பு நாயர் தெரிவிக்கையில்..

இந்த மூங்கில் வீடு சுமார் 5 வருடங்கள் பழமை வாய்ந்ததாக காணப்படுவதாக தெரிவித்ததோடு தணது வாழ்நாளில் 15க்கு மேற்ப்பட்ட மூங்கில் வீடுகள் காற்றினால் இழுத்து வரப்பட்டு யாழ். குடாநாட்டு கரையோரங்களில் ஒதுங்கியதையும் தாம் பார்வையிட்டதையும் நினைவுகூர்ந்தார்.

H1 H2 H3 H4