ஜில்லா – வீரம் வசூல் எவ்வளவு தெரியுமா?

719

Jilla-Veeramவிஜயின் ஜில்லா மற்றும் அஜித்தின் வீரம் ஆகிய படங்கள் ரிலீஸான 17 நாட்களில் வெளிநாடுகளில் மட்டும் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்று பார்ப்போம்.

இந்த பொங்கல் உலக தமிழர்களுக்கு தல, தளபதி பொங்கலாக இருந்தது. பொங்கலை முன்னிட்டு கடந்த 10ம் தேதி ரிலீஸான விஜயின் ஜில்லா மற்றும் அஜித்தின் வீரம் ஆகிய படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளன.

இந்நிலையில் வெளிநாடுகளில் ஜில்லா மற்றும் வீரம் ரிலீஸான 17 நாட்களில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்ற விவரங்களை பார்ப்போம்.

இங்கிலாந்தில் ஜில்லா படம் ரிலீஸான 17 நாட்களில் 2.54 கோடி வசூலித்துள்ளது. அஜித்தின் வீரம் அதே 17 நாட்களில் 1.20 கோடி வசூல் செய்துள்ளதாக பொலிவுட் ஹங்காமா செய்தி வெளியிட்டுள்ளது.

அவுஸ்திரேலியாவில் ஜில்லா தற்போது ஒரு தியேட்டரில் மட்டும் ஓடுகிறது. இந்நிலையில் அப்படம் கடந்த 17 நாட்களில் 24.06 லட்சம் வசூல் செய்துள்ளது. தற்போது ஒரு தியேட்டரிலும் வீரம் படம் ஓடாத நிலையில் ரிலீஸான 10 நாட்களில் 44.94 லட்சம் வசூலித்துள்ளது.

மலேசிய பொக்ஸ் ஒபீஸில் ஜில்லாவும், வீரமும் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது. மலேசியாவில் ஜில்லா 17 நாட்களில் 1.70 கோடியும், வீரம்1.63 கோடியும் வசூல் செய்துள்ளது.

ஜில்லாவும், வீரமும் ஒரே நாளில் ரிலீஸான போதிலும் இரண்டு படங்களின் தாயரிப்பாளர்களும் மகிழ்ச்சி அடையும் வண்ணம் வசூல் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.