முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி அபார வெற்றி!!

307

SLஇலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 248 ஓட்டங்களால் அபார வெற்றியீட்டியுள்ளது.

பங்களாதேஷின் டாக்காவில் 27ம் திகதி ஆரம்பமான போட்டியின் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் பங்களாதேஷ் அணியை துடுப்பெடுத்தாட அழைத்தது.

அதன்படி பங்களாதேஷ் அணி முதல் இன்னிங்ஸில் சகல விக்கெட்களையும் இழந்து 232 ஓட்டங்களைப் பெற்றது. இதில் முஸ்பிகியூர் ரஹீம் 61 ஓட்டங்களையும் சகிப் அல் ஹசன் 51 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் எரங்க 4 விக்கெட்களையும் லக்மால் 3 விக்கெட்களையும் ஹேரத் 2 விக்கெட்களையும் வீழ்த்தினர்.

பதிலுக்கு தனது முதல் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 6 விக்கெட்களை இழந்து 730 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் ஆட்டத்தை இடை நிறுத்திக் கொண்டது.

இலங்கை அணி சார்பில் மஹேல 203 ஓட்டங்களையும் சில்வா 139 ஓட்டங்களையும் வித்தானகே 103 ஓட்டங்களையும் மத்திவ்ஸ் 86 ஓட்டங்களையும் கருணாரத்ன 53 ஓட்டங்களையும் பெற்றனர்.

தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்த பங்களாதேஷ் அணி சற்று நேரத்திற்கு முன்னர் 250 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் சகல விக்கெட்களையும் இழந்து 248 ஓட்டங்களால் படுதோல்வியடைந்தது.

பந்துவீச்சில் பெரேரா 5 விக்கெட்களையும் லக்மால் 3 விக்கெட்களையும் வீழ்த்தினர். போட்டியின் நாயகனாக மஹேல ஜயவர்த்தன தெரிவு செய்யப்பட்டார்.