கிளிநொச்சியில் கால்வாயிலிருந்து ஆணின் சடலம் மீட்பு!!

545

கால்வாயிலிருந்து..

கிளிநொச்சி, ஸ்கந்தபுரம் பகுதியில் கால்வாயிலிருந்து ஆணொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அக்கராயன் குளம் பொலிஸார் மற்றும் ஸ்கந்தபுரம் கிராம அலுவலருக்கு இன்று கிடைத்த தகவலின் அடிப்படையில் கிளிநொச்சி, ஸ்கந்தபுரம் பகுதியூடாக செல்லும் அக்கராயன் குளம் நீர்ப்பாசன கால்வாயின் மூன்றாம் வாய்க்கால் பகுதியில் இருந்து சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் 45 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையான மார்க்கண்டு ஜெகதீஸ்வரன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

குறித்த நபர் கடந்த வெள்ளிக்கிழமை வீட்டில் இருந்து வெளியே சென்றதாகவும் அதன் பின்னர் அவர் வீடு திரும்பவில்லை எனவும் பொலிஸாரின் விசாரணையில் தெரிவித்துள்ளார்.

சம்பவ இடத்திற்கு சென்ற கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்ற நீதவான் ரீ.சரவணராஜா சடலத்தை பார்வையிட்டதுடன் உடற்கூற்று பரிசோதனைக்குட்படுத்தி சடலத்தை உறவினர்களிடம் கையளிக்குமாறு கட்டளையிட்டுள்ளார்.