வீட்டுக்குள் காத்திருந்த அதிர்ச்சி!!

533

இங்கிலாந்தில் சுமார் 7 அடி நீள பாம்பு ஒன்று மிகவும் பரிதாபமான நிலையில் மீட்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தின் காவின்டிரி என்ற நகரத்தில் மார்கோ காவ்செல்லே என்பவரின் நண்பர் குத்தகைக்கு வீடு ஒன்றை வாங்கினார்.

இவ்வீட்டில் குடியேறுவதற்காக மார்கோவும், அவரது நண்பரும் சென்றிருந்தனர். அப்போது வீட்டில் 7 அடி நீள பாம்பு ஒன்றை கண்டு இருவரும் திடுக்கிட்டனர். இதன்பின் அருகில் சென்று பார்த்த பொழுது மிகவும் சுருங்கி, பசியால் சோர்வடைந்த நிலையில் இருந்தது.

இதை எடுத்துக் கொண்டு KBN Reptiles என்ற ஊர்வன வகை கடையின் உரிமையாளரிடம் கொடுத்துள்ளனர்.

இதுகுறித்து கடையின் உரிமையாளர் காட்டி காட்கின்ஸ், இப்பாம்பிற்கு Barry என பெயர் சூட்டப்பட்டுள்ளது என்றும், Barry வந்த பொழுது எலும்புகள் மெலிந்த நிலையில் பயங்கர மோசமாக காணப்பட்டது எனவும் தெரிவித்துள்ளார்.

snake_girl