தந்தை கைது..

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாவடிச்சேனைக் கிராமத்தில் தூ க்கத்தில் இருந்த கு ழந்தைகள் இருவர் அவர்களது த ந்தையினால் கி ணற்றில் வீ சப்பட்ட நிலையில் உ யிரிழந்திருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று அதிகாலை இடம்பெற்றுள்ள இச்சம்பவத்தில் முறையே 10, 07 ஆகிய வ யதுகளையுடைய இரு கு ழந்தைகளின் சட லங்களைப் பொலிஸார் கி ணற்றிலிருந்து மீ ட்டுள்ளனர்.

அஷீமுல் ஹக் (வயது 10) என்ற ஆண் குழந்தையும் அஷீமுல் ஷாஹியா (வயது 07) எனும் பெண் குழந்தையுமே ச டலங்களாக மீ ட்கப்பட்டு பிரேதக் கூறாய்வுப் பரிசோதனைக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பாக வாழைச்சேனையை சேர்ந்த 40 வயதான முஹம்மது லெப்பை சுலைமாலெப்பை எனும் அக்குழந்தைகளின் த ந்தை கை து செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டுள்ளவரின் மனைவி கடந்த ஏழு வருடங்களுக்கு முன்னர் உடல் நலக் கோளாறு காரணமாக மரணித்ததைத் தொடர்ந்து அக்குழந்தைகளை தந்தையே பராமரித்து வந்துள்ளதாகவும் இந்நிலையிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸாரின் ஆரம்பக் கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இச்சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.




