இசையமைப்பாளர் அனிருத் மீது மீண்டும் வழக்குப்பதிவு!!

554

Aniruthஇசையமைப்பாளர் அனிருத் மீது வழக்கு பதிவு செய்யக்கோரி உயர் நீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் ஜெபதாஸ் பாண்டியன், உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், இசையமைப்பாளர் அனிருத் ரவிசந்திரன் வெளியிட்ட இசை அல்பத்தை யூடியூபில் கடந்த 20ம் திகதி பார்த்தேன். இது எனக்கு அதிர்ச்சி அளித்தது. பெண்களை பற்றி ஆபாசமான, தரக்குறைவான, இழிவுபடுத்தும் வகையில் பாடல்கள் வந்தது எனக்கு வேதனை அளித்தது.

மேலும் தாய்மையையும் இழிவுபடுத்தியுள்ளனர். இது இளஞர்களை தூண்டிவிடும். இதற்கு யாரிடமும் அனுமதி பெறவில்லை. டிரைலர், சினிமா காட்சிகளுக்கு சென்சார் சான்றிதழ் பெறுவதுபோல இதற்கும் சான்றிதழ் பெற வேண்டும். ஆனால் அவர் எந்த சான்றிதழும் பெறாமல் இந்த இசை அல்பத்தை வெளியிட்டுள்ளார்.

எனவே அவர் மீது வழக்கு பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரி பொலிஸ் கமிஷனரிடம் கடந்த 20ம் திகதி புகார் கொடுத்தேன். போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

எனவே அனிருத் மீது வழக்கு பதிவு செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கவேண்டும் என்று கூறியுள்ளார்.

இந்த மனுவை நீதிபதி சி.டி.செல்வம் விசாரித்து, மனுதாரர் புகார் மீது பொலிசார் விசாரணை நடத்தி வழக்கு பதிவு செய்ய முகாந்திரம் இருந்தால், சட்டப்படி வழக்கு பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.