இலங்கையில் கொரோனா என சந்தேகிக்கப்படும் 165 பேர் வைத்தியசாலைகளில் அனுமதி!!

604

165 பேர் வைத்தியசாலைகளில்..

இலங்கையில் இதுவரையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகிய 233 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். நேற்றைய தினம் மாத்திரம் புதிதாக 15 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இறுதியாக அடையாளம் காணப்பட்ட 14 பேரும் கொரோனா நோயாளிகளுடன் அருகில் இருந்து பழகியவர்கள் என சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

அவர்களில் ஒருவர் புத்தளம் தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருந்தவராகும். 8 பேர் பலாலி தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருந்தவர்கள் எனவும் 4 பேர் முழங்காவில் தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருந்தவர்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் ஒருவர் மற்றுமொரு தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருந்தவர் என அவர் கூறியுள்ளார். அத்துடன் நேற்றைய தினம் வைரஸ் தொற்றுக்குள்ளாகிய நிலையில் சிகிச்சை பெற்ற மேலும் இருவர் நேற்று குணமடைந்து வீடு திரும்பினார்கள்.

அதற்கமைய குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 61 ஆக அதிகரித்துள்ளது. இதற்கு மேலதிகமாக 165 பேர் வைத்திய கண்கானிப்பின் கீழ் நாடு முழுவதும் உள்ள பல வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.