அமெரிக்காவில் ஒரேநாளில் 2400ற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!!

372

அமெரிக்காவில்..

கொரோனா வைரஸ் தொற்றுக்கு நேற்று ஒரே நாளில் மட்டும் அமெரிக்காவில் 2 ஆயிரத்து 407 பேர் பலியாகியுள்ளனர். இதனால் அந்நாட்டில் வைரஸ்காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 26 ஆயிரத்து 47 ஆக அதிகரித்துள்ளது.

உலகம் முழுவதும் வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கையிலும், பலியானோர் எண்ணிக்கையிலும் அமெரிக்காவே முதலிடத்தில் உள்ளது.

தற்போதைய நிலவரப்படி அமெரிக்காவில் 6 லட்சத்து 13 ஆயிரத்து 886 பேருக்கு வைரஸ் பரவியுள்ளது. குறிப்பாக நேற்று ஒரே நாளில் புதிதாக 26 ஆயிரத்து 945 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த கொரோனா வைரஸ் ஐரோப்பிய நாடுகளை சீரழித்துவருகின்ற அதேநேரம் தற்போது அமெரிக்காவில் கோரத்தாண்டவம் ஆடிவருகிறது.

தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் 19 லட்சத்து 97 ஆயிரத்து 620 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் பரவியவர்களில் 13 லட்சத்து 92 ஆயிரத்து 599 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 4 லட்சத்து 78 ஆயிரத்து 425 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். ஆனாலும், இந்த கொடிய வைரசுக்கு இதுவரை ஒரு லட்சத்து 26 ஆயிரத்து 596 பேர் உயிரிழந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.