ஒருவர் இரண்டு கிலோ பருப்பு, 2 டின் மீன் மாத்திரமே கொள்வனவு செய்ய முடியும்!!

580

பருப்பு மற்றும் டின் மீன்

பருப்பு மற்றும் டின் மீன் ஆகியவற்றுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச விதித்திருந்த கட்டுப்பாட்டு விலையை நீக்கியுள்ளதாக அரசாங்கம் கடந்த 10 ஆம் திகதி அறிவித்துள்ளதால், புதிய விலைகளை அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனடிப்படையில், 65 ரூபாய் கட்டுப்பாட்டு விலை என குறிப்பிடப்பட்டிருந்த ஒரு கிலோ கிராம் பருப்பு 134 ரூபாவுக்கும் 100 ரூபாய் என அறிவிக்கப்பட்டிருந்த 425 கிராம் டின் மீன் ஒன்று 192 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படும் என அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.

அத்துடன் மீண்டும் அறிவிக்கப்படும் வரை ஒரு நபர் இரண்டு கிலோ கிராம் பருப்பு மற்றும் இரண்டு டின் மீன்களை மாத்திரமே கொள்வனவு செய்ய முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு கிலோ கிராம் பருப்பு 65 ரூபாவாக குறைக்கப்படும் முன்னர் சந்தையில் 130 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டது. 65 ரூபாய் என்ற கட்டுப்பாட்டு விலை 20 நாட்கள் மாத்திரமே அமுலில் இருந்தது.

-தமிழ்வின்-