வவுனியா கோவில்குளம் இந்துக் கல்லூரியில் நடைபெற்ற மாணவத் தலைவர்களுக்கான சின்னம் சூட்டும் நிகழ்வு!!(படங்கள்)

561

வவுனியா கோவில்குளம் இந்துக் கல்லூரியில் கடந்த 24ம் திகதி பாடசாலை அதிபர் திருமதி.ஜி.நடராஜா தலைமையில் மாணவத் தலைவர்களுக்கான சின்னம் சூட்டும் நிகழ்வு இடம்பெற்றது.

இன் நிகழ்வில் 2014ம் ஆண்டுக்கான புதிய மாணவத் தலைவர்கள் தெரிவுசெய்யப்பட்டதுடன் அவர்களுக்கு சின்னங்களும் சூட்டப்பட்டன.

இன் நிகழ்விற்கு சனச வங்கியின் முகாமையாளர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டதுடன் , பிரதி அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் உட்பட பலர் கலந்து சிறப்பித்தனர்.

இங்கு கருத்து தெரிவித்த சனச வங்கியின் முகாமையாளர் மற்றும் அதிபர் இருவரும் மாணவர்களின் ஒழுக்கம் பற்றி விரிவாக மாணவர்களுக்கு எடுத்துரைத்தனர்.

OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA