கொரோனா ஆபத்து அதிகம் உள்ள நாடுகளின் பட்டியலில் இலங்கை : Forbes சஞ்சிகை வெளியிட்ட தகவல்!!

541

கொரோனா ஆபத்து..

உலகளாவிய ரீதியில் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக ஆபத்தினை எதிர்கொள்ளும் நாடுகளின் பட்டியலை Forbes சஞ்சிகை வெளியிட்டுள்ளது.

அந்தப் பட்டியலில் கொரோனா ஆபத்தான நாடுகளின் பட்டியலில் இலங்கையும் உள்ளடங்குவதாக உலக புகழ்பெற்ற போர்ப்ஸ் சஞ்சிகை வெளியிட்டு கட்டுரை ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Deep Knowledge Group என்ற நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்விற்கமைய இந்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் கொரோனா ஆபத்து குறைவான நாடுகள் மற்றும் கொரோனா ஆபத்து அதிகம் உள்ள நாடுகள் என இரண்டு பட்டியல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

உலகெங்கிலும் உள்ள 200 நாடுகளுக்காக உருவாக்கப்பட்ட தரவை வல்லுநர்கள் குழு சேகரித்து ஆய்வு செய்தது. 60 நாடுகளின் ஆழமான பகுப்பாய்வின் அடிப்படையில் முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன.

அதற்கமைய கொரோனா பாதுகாப்பு நாடுகள் பட்டியலில் 40 நாடுகளும் கொரோனா ஆபத்தான நாடுகள் பட்டியலில் 20 நாடுகளும் உள்ளடக்கப்பட்டுள்ளன.

பாதுகாப்பான நாடுகள் பட்டியலில் இஸ்ரேல், ஜேர்மனி, தென் கொரியா, சீனா, நியூஸிலாந்து, தாய்வான் சிங்கப்பூர், ஜப்பான், ஹொங்கொங், சுவிட்ஸர்லாந்து, ஒஸ்ரியா, கனடா, ஹங்கேரி, டென்மார்க், நெதர்லாந்து, நோர்வே, UAE,

பெல்ஜிங், வியட்நாம், தாய்லாந்து, பின்லாந்து, Luxembourg, குவைட், Czechia, மொனாகோ, கட்டார், Liechtenstein, சைப்ரஸ், கிரிக், Estonia, மலேசிய, போலந்து, அயர்லாந்து, Croatia, துருக்கி, ஓமான், Slovakia, Latvia, Slovenia, ஆகிய நாடுகளே பாதுகாப்பான நாடுகளாக பெயரிடப்பட்டுள்ளது.

இந்த பட்டியலில் கொரோனா ஆபத்தான நாடுகளாக, இத்தாலி, அமெரிக்கா, பிரித்தானியா, ஸ்பெயின், பிரான்ஸ், சுயீடன், ஈரான், ஈக்குவாட்டர், பிலிப்பைன்ஸ், ரோமானியா, நைஜீரியா, ரஷ்யா, பங்களாதேஷ், மெக்சிகோ, இந்தியா, இலங்கை, இந்தோனேஷியா, மியன்மார், கம்போடியா, லோகோஸ் ஆகிய நாடுகள் இடம்பிடித்துள்ளன