நியூஸிலாந்து அணி அபார வெற்றி : தொடரை 4-0 என வெற்றிபெற்று இந்திய அணிக்கு வெள்ளையடித்தது!!

306

NZ

இந்தியாவுக்கு எதிரான ஐந்தாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டியிலும் நியூஸிலாந்து அணி அபார வெற்றியீட்டியுள்ளது.

நியூசிலாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 ஒருநாள் போட்டிகள், இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. முன்னதாக நடைபெற்ற நான்கு ஒருநாள் போட்டிகளில் ஒருபோட்டி சமநிலையில் முடிவடைந்த நிலையில், மூன்று போட்டிகளில் நியூசிலாந்து அபார வெற்றியீட்டிருந்தது.

இந்தநிலையில் இன்று ஐந்தாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டியில் வெலிங்டனில் ஆராம்பமானது. இதில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்புடன் களமிறங்கிய நியூசிலாந்து சார்பில், ரோஸ் டெய்லர் 102 ஓட்டங்களையும், கேன் வில்லியம்ஸ்சன் 88 ஓட்டங்களையும் விளாச 50 ஓவர்களில் இந்தியப் பந்து வீச்சாளர்களை பதம் பார்த்த நியூசிலாந்து வீரர்கள், ஐந்து விக்கெட்டுக்களை மட்டுமே இழந்து 303 ஓட்டங்களை விளாசினர்.

304 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணிக்கு ஹோலி (82) தவிர வேறு துடுப்பாட்ட வீரர்கள் எவரும் அவ்வளவாக சோபிக்கவில்லை.
குறிப்பாக ஆரம்ப வீரர்களான தவான் (09), சர்மா (04), ரஹானே (02) ஆகியோர் சொற்ப ஓட்டங்களுடனே வெளியேறினர்.

இருப்பினும் நிதானமாக ஆடிய அணித்தலைவர் தோனி 47 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார். முடிவில் 49.4 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் பறிகொடுத்த இந்தியா 216 ஓட்டங்களை மட்டுமே பெற்றுக் கொண்டது.

இதன்படி 87 ஓட்டங்களால் நியூஸிலாந்து வெற்றியைத் தனதாக்கிக் கொண்டது. இதன்படி 5 போட்டிகளைக் கொண்ட தொடர் 4-0 என நியூஸிலாந்து வசமானது.

இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி எதிர்வரும் 6ம் திகதி நடைபெறவுள்ளது.