யாழில் ஆவா குழுவைச் சேர்ந்த ஆவா உள்ளிட்ட மூவருக்கு விளக்கமறியல் : எண்மருக்கு பிணை!!

556

Avaயாழில் நடைபெற்ற பல்வேறு குற்ற செயல்கள் மற்றும் வாள் வெட்டுக்களுடன் தொடர்புடையவர்கள் என கைது செய்யப்பட்ட ஆவா குழுவை சார்ந்த எட்டு பேருக்கு இன்றைய தினம் பிணை வழங்கபட்டுள்ளது.

ஆவா உட்பட மூவரை தொடர்ந்து எதிர்வரும் 13 ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றத்தால் உத்தரவு இடப்பட்டுள்ளது.

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

யாழில் நடைபெற்ற பல்வேறு குற்ற செயல்கள் மற்றும் வாள் வெட்டுக்களுடன் தொடர்புடையவர்கள் என ஆவா குழு எனும் இக்குழுவினை சேர்ந்த 13 பேரினை கடந்த 6 ம் திகதி கோப்பாய் பொலிசார் கைது செய்திருந்தனர்.

இதில் கடந்த 17ம் திகதி நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது இருவருக்கு பிணை வழங்கபட்டதுடன் ஏனைய 11 பேரையும் இன்றைய தினம் வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு இடப்பட்டு இருந்தது.



இந் நிலையில் இன்றைய தினம் நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது 8 பேருக்கு பிணை வழங்கபட்டுள்ளதுடன் ஏனைய மூவரையும் தொடர்ந்து எதிர்வரும் 13 ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு இடப்பட்டுள்ளது.

அதேவேளை கடந்த 17ம் திகதி நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளர்கள் இக் குழுவை சேர்ந்தவர்களால் அச்சுறுத்தப்பட்டு இருந்தனர்.

அது தொடர்பாக யாழ்.பொலிஸ் நிலையத்தில் ஊடகவியலாளர்களால் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டு இருந்த போதிலும் அச்சுறுத்தல் விடுத்த எவரும் இதுவரை பொலிசாரால் கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.