விஜயின் புகழ் பரப்பும் காஜல் அகர்வால்!!

267

Vijay-Kajal

விஜய்யுடன் துப்பாக்கி, ஜில்லா என்ற இரண்டு படங்களில் டூயட் பாடியுள்ளார் காஜல் அகர்வால். இரண்டு படங்களிலுமே அவர்களது கெமிஸ்ட்ரி ரொம்ப நன்றாக வேலை செய்திருந்தது.

குறிப்பாக ஜில்லாவில் சற்று தூக்கலாகவே இருந்தது. இதனால் மார்க்கெட்டில் இருக்கும் மற்ற முன்னணி நடிகைகளுக்கு, இவர் விஜய்யின் ஆஸ்தான் நாயகியாகி விடுவாரோ என்கிற அச்சம் கூட நிலவத் தொடங்கியது.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் தமிழில் அடுத்தடுத்து படம் இல்லாமல், தற்போது ஆந்திராவில் தஞ்சமடைந்திருக்கிறார் காஜல். அங்குள்ள, ராம்சரண்தேஜா, நாகசைதன்யா என முன்னணி இளவட்டங்கள் காஜலை வழக்கம்போல் அரவணைத்துக் கொண்டுள்ளனர்.

இதனால் இளசுகளின் ஆதரவு தனக்கு இருக்கும்போது தனது மார்க்கெட்டை எந்த நடிகையாலும் அசைக்க முடியாது என்று மார்தட்டிக்கொண்டு திரிகிறாராம் காஜல்.

இதற்கிடையே படப்பிடிப்பு தளங்களில் ஓய்வில் இருக்கும்போது, விஜய்யுடன் நடித்த நினைவுகளையும் அசை போடுகிறாராம் நடிகை. அப்போது, வேறு பக்கமாக திரும்பி அமர்ந்திருக்கும் அப்பட நாயகர்களை தன் பக்கம் திருப்பி, விஜய்யின் அருமை பெருமைகளை அள்ளி விடுகிறாராம். என்னவொரு டான்ஸ், என்னவொரு பைட், என்னவொரு ஸ்பீடு என்று விஜய்யின் அசைவுகள் ஒவ்வொன்றையும் சொல்லிச்சொல்லி உச் கொட்டுகிறாராம் காஜல்.

அதைக்கேட்டு ஆந்திரவாலாக்கள் டென்சன் ஆகிவிடக்கூடாது என்பதற்காக, அதற்காக நீங்களும் ஒன்றும் சளைததவர்கள் அல்ல. பாடல் காடசிகள் நீங்கள் ஆடும் அதிரடி ஆட்டம் வேறு எந்த மொழி நடிகர்களுக்கும் வராதே என்று அவர்களையும் தூக்கிப்பேசி அவர்களின் ஈகோ பிரச்சினைக்கு ஆளாகாமலும் தப்பிக்கிறாராம் காஜல்.