கவர்ச்சியிலிருந்து அதிரடிக்கு தாவிய கார்த்திகா!!

292

Karthika Saree Stills In Dammu Audio Launch

பழைய நடிகை ராதாவின் மூத்த மகள் கார்த்திகா தமிழில் கோ என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். இதன்பிறகு தமிழில் அவ்வளவாக வாய்ப்பு கிடைக்காத இவர், கடைசியாக பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த அன்னக்கொடி படத்தில் மிகவும் கவர்ச்சியாக நடித்திருந்தார்.

இந்நிலையில் தற்போது, எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் ஆர்யா, விஜய் சேதுபதி நடிக்கும் புறம்போக்கு என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு குலுமணாலியில் தொடங்கி நடந்து முடிந்துள்ளது. அடுத்தக்கட்ட படப்பிடிப்பு ராஜஸ்தானில் இருக்கும் ஜோத்பூரில் நடைபெற இருக்கிறது.

இதுகுறித்து நடிகை கார்த்திகா கூறும்போது, இந்த படத்தில் எனக்கு ஆக்சன் காட்சிகளில் திறமை காட்டக்கூடிய கதாபாத்திரம். இந்த கதாபாத்திரத்தின் தோற்றம் வீடியோ கேம் மூலம் பிரசித்தி பெற்ற வீராங்கனை லாரா கிராப்டை சார்ந்து இருக்கும்.

இதுதவிர இப்படத்தில் நான் ஆடியிருக்கும் டேப் டான்ஸ், எனக்கு நடனத்திலும் நல்ல பெயரை பெற்றுத் தரும். என் மேல் நம்பிக்கை வைத்து எனக்கு இந்த வாய்ப்பளித்த இயக்குனர் ஜனநாதனுக்கு நன்றி சொல்ல வேண்டும். அவர் என் பார்வையில் ஒரு சரித்திர பேராசிரியையாக தெரிகிறார். அவரது உலக அறிவு அபரிதமானது… வியப்புக்குரியது என்று அவர் கூறினார்.