ஹன்சிகா தொலைவில், நயன்தாரா அருகில் : சிம்பு தவிப்பு!!

633

Simbu

சிம்பு வீட்டு திருமண செய்தி கேட்டு, அவரது இரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சியில் இருக்கின்றனர். இரசிகர்களின் மகிழ்ச்சிக்கு சிம்புவின் தங்கை இலக்கியாவிற்கு திருமண திகதி உறுதிபடுத்தப்பட்டுவிட்டது தான் காரணம்.

ஹன்சிகாவுடனான காதல் உறுதியாகிவிட்டது. ஆனால் திருமணம் இப்போது இல்லை. என் தங்கை இலக்கியாவின் திருமணம் முடிந்தபிறகு தான் என் திருமணம் என்று சிம்பு உறுதியாக கூறிவிட்டதால் இலக்கியாவின் திருமணத்திற்காக ஆவலுடன் காத்திருந்தனர் சிம்புவின் இரசிகர்கள்.

சமீபத்தில் சிம்புவின் தந்தை டி.ஆர் தனது மகள் இலக்கியாவின் திருமணம் பற்றி அறிவித்துவிட்டதால் அடுத்ததாக சிம்புவின் திருமணத்திற்காக தயாராகிவருகின்றனர் இரசிகர்கள். பாண்டிராஜ் படத்தில் நயன்தாராவுடன் நடித்துவரும் சிம்புவிற்கு காதல் வசனங்களே வரவில்லையாம்.

அப்படியே திக்கித்திணறி சிம்பு பேசிவிட்டாலும் ஷூட்டிங் ஸ்பாட்டே அதிரும்படி கைதட்டி படக்குழுவினர் சிம்புவை வெட்கப்படவைக்கிறார்களாம்.

சிம்பு-ஹன்ஸிகாவின் காதல் வாழ்க்கை எப்படி இருக்கிறது என்று விசாரித்தால், ஹன்ஸிகா கமிட் ஆன படப்பிடிப்புகளுக்காக வெளிநாடுகளுக்கு பறந்துகொண்டிருப்பதால் ஃபோன் மூலம் மட்டுமே காதலை வளர்த்துக்கொண்டிருக்கிறார்கள் என்கிறது கோடம்பாக்கம்.

ஹன்ஸிகாவை தொலைவிலும், நயன்தாராவை அருகிலும் இருக்க சிம்புவின் நிலை கவலைக்குறியதே. இலக்கியாவின் திருமணம் முடிந்து விரைவிலேயே சிம்புவின் திருமணமும் நடைபெற வேண்டும் என்பது சிம்புவின் இரசிகர்கள், அவரது குடும்பத்தினர் மற்றும் தமிழ்த்திரையுலக இளம் ஹீரோக்கள் பலரின் ஆசையாக இருக்கிறது.