பொது போக்குவரத்து சேவையை பயன்படுத்தும் மக்களுக்காக புதிய விதிமுறைகள் அறிமுகம்!!

516

புதிய விதிமுறைகள்..

சமகாலத்தில் பொது போக்குவரத்து சேவைகளில் பயணிக்கும் பயணிகள், சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் பின்பற்ற கூடிய சுகாதார பாதுகாப்பு விதி முறைகள் வெளியிடப்பட்டுள்ளன.

சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள வழிக்காட்டல்களுக்கு அமைய இந்த விதிமுறை தயாரிக்கப்பட்டுள்ளதாக பதில் பொலிஸ் மா அதிபர் சீ.டீ.விக்ரமரத்ன தெரிவித்துள்ளார்.

பொதுமக்களின் அன்றாட வாழ்க்கையை நடத்தி செல்வதற்காக பொலிஸ் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டதன் மூலம், பொது சுகாதார சேவைகள், பொது பாதுகாப்பு நடவடிக்கைகளை கவனிக்காத பல சம்பவங்கள் பதிவாகி உள்ளன.

அதற்கமைய, அனைத்து பொது போக்குவரத்து சேவைகளையும் ஆரம்பிப்பதற்கும் முன்னர் கிருமி நாசினி தெளிக்க வேண்டும் என பதில் பொலிஸ் மா அதிபர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பொது போக்குவரத்து சேவையில் பயணிக்கும் அனைவரும் முக கவசம் அணிய வேண்டும், ஒருவருக்கு ஒருவர் இடையில் ஒரு மீற்றர் தூரம் கடைபிடிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பதில் பொலிஸ் மா அதிபர் ஆலோசனை வழங்கியுள்ளார்.

பேருந்து நிறுத்துமிடங்கள் மற்றும் வாகனங்களுக்கு நுழையும் இடங்களில் வைக்கப்பட்டுள்ள திரவத்துடன்னான போத்தல்களில் கைகளை சுத்தம் செய்துக் கொள்ள வேண்டும். பேருந்துகளில் உள்ள கம்பிகளை பிடிக்காமல் பேருந்திற்குள் நுழையவும் இறங்கவும் சாரதியினால் பயணிகளுக்கு நேரம் வழங்க வேண்டும் என பதில் பொலிஸ் மா அதிபர் சீ.டீ.விக்ரமரத்ன மேலும் தெரிவித்துள்ளார்.