இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 321 ஆக உயர்வு!!

624

கொரோனா..

இலங்கையில் மேலும் 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன் காரணமாக இலங்கையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 321 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

அதேவேளையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி சிகிசிச்சை பெற்றுவந்த இரண்டு நோயாளர்கள் குணமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இலங்கையில் இதுவரையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் 104 பேர் குணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.