இலங்கையில் சிக்கியிருக்கும் வெளிநாட்டவர்களுக்கு நிவாரணம்!!

564

வெளிநாட்டவர்களுக்கு நிவாரணம்..

கொரோனா வைரஸ் பரவுவதால் இலங்கையில் ஊரடங்கு அமுல்ப்படுத்தப்பட்டிருந்தது. ஊரடங்கு தளர்த்தப்பட்டதும் நாட்டில் சிக்கியுள்ள வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளைப் பற்றி தேடும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கான வேலைத்திட்டம் ஒன்றை சுற்றுலா வல்லுநர்கள் மற்றும் தொழிற்சங்கம் இணைந்து ஆரம்பித்துள்ளது.

அவர்களுடன் இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையும் இணைந்துள்ளது. கட்டுநாயக்க பிரதேசத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த வேலைத்திட்டத்தை நாடு முழுவதும் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக சுற்றுலா தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.

இதுவரையில் கண்டுபிடித்தவர்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது என சுற்றுலா சங்கம் தெரிவித்துள்ளதோடு, தேடல் நடவடிக்கையும் தொடர்கிறது என தெரிவித்துள்ளது.