5 போட்டிகளிலும் அரைசதம் அடித்து நியூசிலாந்து வீரர் சாதனை!!

282

Williamson

இந்தியாவுக்கு எதிரான ஐந்து ஒருநாள் போட்டிகளிலும் நியூசிலாந்து அணியின் வில்லியம்சன் அரைசதம் அடித்து சாதனை படைத்துள்ளார்.

நியூசிலாந்து சென்றுள்ள இந்திய அணி 4-0 என்ற கணக்கில் ஒருநாள் தொடரை இழந்துள்ளது. இத்தொடரில் ஐந்து ஒருநாள் போட்டிகளிலும் அரைசதம் அடித்து வில்லியம்சன் சாதனை படைத்துள்ளார்.

ஐந்து போட்டி தொடரில் அனைத்து ஆட்டங்களிலும் அரை சதம் அடித்த 2வது வீரர் வில்லியம்சன் ஆவார்.

2003–04 ஆண்டு நியூசிலாந்துக்கு எதிரான 5 போட்டி தொடரில் பாகிஸ்தான் வீரர் யாசிர் ஹபீத் அனைத்து ஆட்டங்களிலும் அரை சதம் அடிதிருந்தமை குறிப்பிடத்தக்கது.