உணவு ஒவ்வாமை காரணமாக பரிதாபமாக உயிரிழந்த 11 வயது சிறுவன்!!

538

11 வயது சிறுவன்..

உணவு ஒவ்வாமை காரணமாக மட்டக்களப்பு கல்லடி மாரியம்மன் கோயில் வீதியில் வசிக்கும் 11 வயதுடைய அன்புமாரன் கோகுல் என்ற சிறுவன் உயிரிழந்துள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கல்லடி மாரியம்மன் கோயில் வீதியில் வசிக்கும் ஒரே குடும்பத்தை சேர்ந்த 05 பேர் வயிற்றோட்டம் காரணமாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் குறித்த குடும்பத்தின்‌ 11 வயதுடைய சிறுவன் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளதாக தெரியவருகிறது. கடந்த சனிக்கிழமை கல்லடி பகுதியில் மீன் வியாபாரத்தில் ஈடுபட்ட ஒருவரிடம் கணவாய் வாங்கியதாகவும்,

பின் அதனை சமைத்து குடும்பத்துடன் சாப்பிட்ட பின் தமக்கு உணவு ஒவ்வாமை ஏற்பட்டதாகவும், இதனையடுத்து குடும்பத்துடன் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் உயிரிழந்த சிறுவனின் தாய் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளார்.

சம்பவத்தில் உயிரிழந்த சிறுவனின் சடலம் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.