
அவுஸ்திரேலியாவில் நடைபெறும் பிக்பேஸ் 20-இருபது கிரிக்கெட் தொடரில் பங்கேற்க இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்கவுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
இலங்கை கிரிக்கெட் தெரிவுக் குழுவின் தீர்மானத்தில் அடிப்படையில் லசித் மலிங்க குறித்த போட்டித்தொடரில் இருந்து இடைநடுவில் நாட்டுக்கு அழைக்கப்பட்டிருந்தார்.
இலங்கையின் விசேட பயிற்சி நடவடிக்கைக்காக அவர் இவ்வாறு அழைக்கப்பட்டிருந்தார். எனினும் லசித் மலிங்க விளையாடும், மெல்பர்ன் ஸ்டார்ஸ் கழகம் விடுத்த கோரிக்கையின் அடிப்படையில் இலங்கை கிரிக்கட் அவர் இந்த தொடரில் பங்கேற்க அனுமதித்துள்ளது.





