ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையை பயன்படுத்தி இலங்கையை கட்டுப்படுத்த முயற்சிக்கப்படுவதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச குற்றம் சுமத்தியுள்ளார்.
இலங்கையின் தென்பகுதியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய ராஜபக்ச, பிரித்தானியாவிடம் இருந்து சுதந்திரம் பெற்ற பின்னர் இலங்கை சுதந்திர நாடு என்று சுட்டிக்காட்டினார்.
வெளியார் தற்போது இலங்கையை தற்போது தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முயற்சிக்கின்றனர்.
அதற்காக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையை பயன்படுத்திக்கொள்ள அவர்கள் முயற்சிப்பதாக ஜனாதிபதி குற்றம் சுமத்தினார்.
இலங்கையின் இறுதிப்போரின் மூன்று நாட்கள் குறித்து கேள்வி எழுப்புவோர் உலக யுத்தத்தின் கடைசி இரண்டு நாட்கள் தொடர்பில் யார் மீது குற்றம் சுமத்துவார்கள் என்று ஜனாதிபதி கேள்வி எழுப்பினார்.
ஒவ்வொரு ஆறு மாதங்களுக்கு ஒருமுறையும் ஜெனிவாவில் இலங்கைக்கு எதிராக குண்டுகள் வீசப்படுவதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
ஜெனீவா குண்டில் என்னை சிக்க வைக்க சிலர் முயற்சிக்கின்றனர்..
ஜெனீவா குண்டில் என்னை சிக்க வைப்பதற்கு சிலர் முயற்சித்து வருவதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
உயிர்த் தியாகம் செய்து வென்றெடுக்கப்பட்ட சுதந்திரத்தை வெளிநாட்டவருக்கு காட்டிக் கொடுக்க முடியாது. நாட்டில் குண்டுகள் வெடிக்காத போதிலும், ஜெனீவாவில் நாட்டுக்கு எதிராக குண்டுகள் வெடிக்கின்றன.
நாட்டு மக்களையும், தேசத்தின் இறையாண்மையையும் எவராலும் காட்டிக்கொடுக்க முடியாது. நாம் பிறந்த நாம் இறக்கும் இந்த தாய்நாட்டை பாதுகாக்க வேண்டியது அனைவரினதும் கடமையாகும என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
மத்துகம பிரதேசத்தில் நடைபெற்ற இலவச பாடசாலை உபகரண விநியோக வைபவத்தில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.