ஊரடங்கு நேரத்தில் காட்டுப்பகுதியில் இளம் ஜோடி செய்த செயல் : ட்ரோன் கமெராவை கண்டவுடன் அலறி அடித்து ஓடும் காட்சி!!

5412


இளம் ஜோடி..தமிழகத்தில் ஊரடங்கு அமுலில் இருக்கும் நிலையில், இளம் ஜோடி ஒன்று தனியாக சந்தித்து பேசிக் கொண்ட வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக உலகின் பல்வேறு நாடுகளில் ஊரடங்கு உத்தரவு அமுலில் உள்ளது. அதே போன்று இந்தியாவிலும் ஊரடங்கு உத்தரவு அமுலில் உள்ளது.
இந்நிலையில் அங்கிருக்கும் தமிழகத்தின் ஒரு சில பகுதிகளில் மக்கள் இந்த ஊரடங்கு விதிகளை சரியாக பின்பற்றுவதில்லை. இதனால் அங்கிருக்கும் பொலிசார் ட்ரோன் கமெரா மூலம் கண்காணித்து வருகின்றனர்.


அப்படி வழக்கமாக பொலிசார் ட்ரோன் கமெரா மூலம் க  ண்காணிப்பு சோதனை நடத்திய போது, காதல் ஜோடி ஒன்று காட்டுக்குள் அமர்ந்து ஜாலியாக பேசிக்கொண்டு இருந்தனர்.

அவர்களை ட்ரோன் கமெரா மூலமாக பொலிசார் கண்டுபிடித்தனர். இதைப் பார்த்த அவர்கள் முகத்தை மூடிக்கொண்டு தாங்கள் வந்த இருசக்கர வாகனத்தில் அங்கிருந்து தப்பினர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.