கொரோனா வைரஸ் தொற்று : உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்தை கடந்தது!!

659

கொரோனா வைரஸ்..

கொரோனா வைரஸ் காரணமாக உலகளாவிய ரீதியில் இதுவரை இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் மரணமாகியுள்ளனர். இதில் 54 ஆயிரம் பேர் அமெரிக்கர்கள்.

ஜோன்ஸ் ஹொப்கின்ஸ் பல்கலைக்கழக தரவுகள் இதனை காட்டுகின்றன. இந்த தரவுகளின்படி 29 லட்சம் பேர் கொரொனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சீனாவில் 2020 ஜனவரி 11ம் திகதி இந்த தொற்றினால் ஏற்பட்ட முதல் மரணம் வெளியிடப்பட்டுள்ளது. இதன் பின்னர் 210 நாடுகளில் இந்த தொற்று பரவியுள்ளது.

இதுவரை 5 நாடுகள் 20 ஆயிரம் உயிரிழப்புக்கள் என்ற எண்ணிக்கையை கடந்துள்ளன. இதில் அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெய்ன் மற்றும் பிரான்ஸ் என்பன முக்கிய நாடுகளாக உள்ளன.

பிரித்தானியாவில் நேற்று உயிரிழப்புகளின் எண்ணிக்கை 20 ஆயிரத்தை கடந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிரான்ஸில் நேற்று மாத்திரம் 369 மரண எண்ணிக்கை பதிவானது. அங்கு இதுவரை 22,614 பேர் உயிரிழந்துள்ளனர்.