மும்பையில் தண்ணீர் வரி கட்டாமல் நிலுவை வைத்துள்ள நபர்களின் பட்டியலில் சச்சின் டெண்டுல்கர் இடம்பெற்றுள்ளார்.
பிர்கான் மும்பை மாநகராட்சிக்கு தண்ணீர் வரி கட்டாமல் நிலுவை வைத்துள்ள இரண்டு லட்சம் பேர்களின் பட்டியல் இணையதளத்தில் வெளியிடப்பட்டது.
இவர்களிடமிருந்து ஜனவரி 16ம் திகதி வரை 1000 கோடி ரூபாய் வசூலிக்க வேண்டியுள்ளது. இதை வசூலிப்பதற்காக மாநகராட்சி தீவிர நடவடிக்கையில் இறங்கியுள்ளது.
நிலுவை வைத்துள்ளவர்களின் பட்டியலில் மறைந்த சிவசேனா தலைவர் பால் தாக்கரே, கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், சமாஜ்வாதி கட்சி தலைவர் அபு ஆஸ்மி, மகாராஷ்டிராவின் முன்னாள் முதல்வர் அந்துலே ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.