சடலங்களை பொதியிடும் உறைகளுக்கான கோரிக்கை : விசாரணை மேற்கொள்ளுமாறு முறைப்பாடு!!

766

சடலங்களை பொதியிடும்..

சுகாதார அமைச்சினால் சர்வதேச செஞ்சிலுவை சங்கத்திடம் சடலங்களை பொதியிடும் 1000 உறைகளுக்கான கோரிக்கை விடுக்கப்பட்ட கடிதம் ஊடகங்களுக்கு சென்றமை தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு முறையிடப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் சுனில் டி அல்விஸ் இந்த முறைப்பாட்டை செய்துள்ளார். இந்த உறைகள் கொரோனா வைரஸால் மரணமாவோரின் சடலங்களுக்காக கோரப்பட்டுள்ளது என்ற வகையில் ஊடகங்களில் செய்தி வெளியாகியிருந்தது. இது பிழையான செய்தியாகும்.

இலங்கையில் நாளொன்றுக்கு பல்வேறு காரணங்களுக்காக 100இற்கும அதிகமான மரணங்கள் சம்பவிக்கின்றன. கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ள தற்போதைய நிலையில் சந்தேகமான மரணங்கள் நிகழ்ந்தாலும் சடலங்களை உறைகளில் பொதியிட்டே அடக்கம் அல்லது தகனம் செய்ய வேண்டும்.

இந்த நிலையில் சுகாதார அமைச்சிடம் குறித்த உறைகளுக்கு தட்டுப்பாடு நிலவியது. இதனையடுத்தே ஒளி ஊடுருவ முடியாத உடலம் பொதியிடும் உறைகளை தாம் சர்வதேச செஞ்சிலுவை சங்கத்திடம் கோரியதாக சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் தெரிவித்துள்ளார்.

-தமிழ்வின்-