கடற்படை அதிகாரியின் மனைவி மற்றும் இரண்டு வயது குழந்தைக்கும் கொரோனா!!

1005

கொரோனா..

வெலிசரை கடற்படை முகாமில் கடமையாற்றிய நிலையில் செவனகலை பிரதேசத்தில் உள்ள வீட்டுக்கு விடுமுறையில் சென்றிருந்த கடற்படை அதிகாரி, அவரது மனைவி மற்றும் இரண்டு வயதான மகளுக்கும் கொரோனா வைரஸ் தொற்றியுள்ளதாக தெரியவந்துள்ளது.

குறித்த கடற்படை அதிகாரிக்கு கொரோனா தொற்றியிருப்பது கடந்த 25 ஆம் திகதி உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து, அவரது குடும்பத்தினருக்கு பீ.சீ.ஆர். பரிசோதனை நடத்தப்பட்டதுடன் அவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்றியிருப்பது கண்டறியப்பட்டதை தொடர்ந்து அவர்கள் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக செவனகலை பொது சுகாதார பரிசோதகர் தெரிவித்துள்ளார்.

சம்பந்தப்பட்ட கடற்படை அதிகாரியுடன் பழகிய நபர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரும் தத்தமது வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் எனவும் அவர் கூறியுள்ளார்.

-தமிழ்வின்-