கடற்படை சிப்பாய்களினால் 400 பேருக்கு கொரோனா தொற்றக்கூடிய அபாயம்!!

497

கொரோனா..

கடற்படை சிப்பாய்களினால் 400 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று பரவக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் டொக்டர் ஹரித அலுத்கே தெரிவித்துள்ளார்.

வெலிசறை கடற்படை முகாமில் கொரோனா தொற்றாளிகள் பதிவானமை ஓர் புதிய திருப்பு முனையை உருவாக்கியுள்ளது எனவும் நாடு முழுவதிலும் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டம் இன்னும் இரண்டு வாரங்களுக்கு அமுல்படுத்தப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதுவரையில் ஆபத்து குறைவு என அடையாளம் காணப்பட்ட பகுதிகளில் தற்பொழுது நோயாளிகள் பதிவாகின்றனர் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பாதுகாப்பானது என கருதப்பட பகுதிகளில் தற்பொழுது பாதுகாப்பு நிலைமை குறைவடைந்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

நொச்சியாகம பிரதேசத்தில் கடற்படை சிப்பாய் ஒருவர் முழு கிராமத்திற்குமே உரம் விநியோகம் செய்துள்ளார் எனவும் அவரது தந்தை விவசாய திணைக்கள அதிகாரி எனவும் தெரிவித்துள்ளார்.

குறித்த சிப்பாய் சுமார் 400 பேருடன் தொடர்பு கொண்டிருந்தார் என டொக்டர் ஹரித அலுத்கே சுட்டிக்காட்டியுள்ளார்.

ஹம்பாந்தோட்டையில் கொரோனா தொற்றுக்கு இலக்கான படைவீரர் ஒருவர் 200 பேருடன் தொடர்பு கொண்டுள்ளதாகவும் இவ்வாறானவர்களை அடையாளம் காண்பதற்கு இரண்டு வார கால அவகாசம் தேவை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

-தமிழ்வின்-