கொரோனாக்கு இலக்கான 208 க டற்ப டை வீ ரர்கள் : 4000 பேர் தனிமைப்படுத்தல்!!

749

க டற்ப டை வீ ரர்கள்..

இலங்கையில் அடையாளம் காணப்பட்ட மொத்த கொரோனா நோயாளர்களில் 208 க டற்ப டையினர் அடங்குவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

தற்போது வரையில் 588 கொரோனா நோயாளர்கள் இனங் காணப்பட்டுள்ளனர். கடந்த ஐந்து நாட்களில் மாத்திரம் 277 நோ யாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களில் 208 க டற்ப டை வீ ரர்களும் அடங்குகின்றனர்.

நோ ய் பா திப்பிற்கு உட்பட்ட க டற்ப டை வீ ரர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என இரா ணுவ த ளபதி சவேந்திர சில்வா தெரிவித்தார்.

க டற்ப டை வீ ரர்கள் மற்றும் அவர்களின் உறவினர்கள் 4000 பேர் தனிமைப்படுத்தப்பட்டு பரிசோ திக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் முழுமையாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 134 ஆக அதிகரித்துள்ளது. 437 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இவர்களில் எவரும் ஆ பத்தான நிலையில் இல்லை என ஐ.டீ.எச் வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

-தமிழ்வின்-