14 வயதில் தாயான தமிழ்ச் சிறுமி!!

433

Babyபண்டாரவளை, அம்பதண்டேகம பிரதேசத்தில் 14 வயதான சிறுமி நேற்று முன்தினம் இரவு தனது வீட்டில் குழந்தையை பெற்றெடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

எனினும் பிறந்த குழந்தை இறந்து விட்டதாகவும் பொலிஸார் கூறினர். தமிழ் தோட்டத் தொழிலாளியின் மகளான இந்தச் சிறுமி சில மாதங்களுக்கு முன்னர் பசறை பிரதேசத்தில் வசித்து வந்துள்ளார்.

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

பாடசாலைக்கு சென்று வந்த அவர், பாடசாலைக்கு செல்வதை இடைநிறுத்தி விட்டு பசறையில் உள்ள அக்கா வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு வசித்த வந்த போது மைத்துனர் அவரை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளதாக தெரியவருகிறது.

சகோதரியின் கணவரான இந்த நபர் பல காலமாக யுவதியை இவ்வாறு பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தி வந்துள்ளார்.



இந்த நிலையில் குழந்தை பெற்றெடுத்த யுவதி ஆபத்தான நிலையில் தியத்தலாவ ஆரம்ப வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் குறித்து பண்டாரவளை தலைமையக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.